18 Feb 2024 4:49 PM GMT
#44576
நடைமேடையில் பஸ் நிறுத்தப்படுமா?
திண்டுக்கல் பஸ் நிலையம்
தெரிவித்தவர்: ராகவன்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் சேலம், ஈரோடு, கரூர் செல்லும் பஸ்கள் அதற்கான நடைமேடையில் நிறுத்தப்படுவதில்லை. மாறாக பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. இதனால் நடைமேடையில் காத்திருக்கும் பயணிகள் ஓடிச்சென்று அந்த பஸ்களில் ஏறும் அவல நிலை உள்ளது. எனவே இரவில் நடைமேடைகளில் பஸ்களை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.