7 Jan 2024 11:47 AM GMT
#43444
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
உதகமண்டலம்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் கேத்தொரை மற்றும் பழைய அருவங்காடு செல்லும் சாலையோரங்களில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அதுவும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட கூட முடியவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்.