7 Jan 2024 11:34 AM GMT
#43438
குதிரைகள் நடமாட்டம்
ஊட்டி
தெரிவித்தவர்: நவநீத்
ஊட்டியில் இருந்து கூடலூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் குதிரைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். தற்போது குதிரைகளும் அதிகளவில் நடமாடி வருவதால், மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு ஊட்டி நகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும்.