31 Dec 2023 12:25 PM GMT
#43297
கால்நடைகள் தொல்லை
கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் பஜாரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக செல்கின்றன. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அவை சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரங்களில் தாக்குகின்றன. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் அச்சப்படுகிறார்கள். எனவே கால்நடைகள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.