5 Nov 2023 11:15 AM GMT
#41952
நடைபாதை வேண்டும்
கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்
பந்தலூர் தாலுகா சேரங்கோடு அருகே சிங்கோனா பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நடைபாதை வசதி இல்லை. இதனால் கரடு, முரடான மண் பாதையில் அவர்கள் அவதியுடன் நடந்து சென்று வருகின்றனர். அதுவும் மழை பெய்துவிட்டால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே அங்கு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.