5 Nov 2023 10:53 AM GMT
#41937
கால்நடைகள் தொல்லை
ஊட்டி
தெரிவித்தவர்: மதன்
ஊட்டியில் நகர்ப்பகுதி மட்டுமின்றி மேட்டுபாளையம் சாலை உள்பட முக்கிய இடங்களில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக கூட்டமாக செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் கால்நடைகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.