1 Oct 2023 11:45 AM GMT
#40809
போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்
பனங்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த பனங்குடி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிடுகின்றனர். இதன்காரமாக அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?