21 May 2023 12:35 PM GMT
#33017
இருளில் மூழ்கிய ரெயில்வே மேம்பாலம்
பூதலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சையை அடுத்த பூதலூர் ரெயில்வே மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் ரெயில்வே மேம்பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயிலவே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?