26 Oct 2022 2:17 PM GMT
#20365
போக்குவரத்து நெரிசல்
சிதம்பரம்
தெரிவித்தவர்: வேல்
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நடராஜரை வழிபட்டு செல்கிறார்கள். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை கிழக்கு மற்றும் வடக்கு வீதியில் தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமமடைந்து வருகின்றனர். ஆகவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.