20 Aug 2022 11:43 AM GMT
#9509
அருவிக்கரை கிருஷ்ணன்கோவில் ரோடு சரி செய்யப்படுமா?
thiruvattar
தெரிவித்தவர்: sindhukumar
திருவட்டார் ஊராட்சிக்கு உட்பட்ட அருவிக்கரை கிருஷ்ணன் கோவில் செல்லும் ரோடு குண்டு குழியியுடன் மோசமாக இருந்தது. சமீபத்தில் இந்த ரோட்டில் கான்கிரீட் தளம் அமைத்தார்கள். சுமார் ஒரு பர்லாங் நீள முள்ள சாலையின் கால் பகுதி மட்டுமே கான்கிரீட் தளம் போட்டு விட்டு மீதி பகுதியை அம்போ என விட்டு விட்டார்கள்.இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி முடிக்கப்படாமல் உள்ள சாலையின் ஏனைய பகுதியையும் கான்கிரீட் தளம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.- சுப்பிரமணியன், அருவிக்கரை