15 March 2023 12:21 PM GMT
#29005
ஆபத்தான சாலை
மணவாளக்குறிச்சி
தெரிவித்தவர்: கோ.ராஜேஷ்கோபால்
இரணியலில் இருந்து மணவாளக்குறிச்சிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலக்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.