17 Aug 2022 11:36 AM GMT
#8862
பூங்காவை பராமரிக்க வேண்டும்
ஸ்ரீராம் நகர்
தெரிவித்தவர்: கமல்
காட்பாடி ராதாகிருஷ்ணன் நகருக்கு உட்பட்ட ஸ்ரீராம்நகர் பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை திறந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதை முறையாகப் பராமரிக்கவில்லை. அந்தப் பூங்காவுக்கு பெயர் பலகை கூட வைக்கவில்லை. பூங்காவின் உள்ளே செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. சிறுவர், சிறுமிகள், பெற்றோர் பூங்காவுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். தற்போது வேலூரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மக்கள் பொழுதுக் போக்குக்காக ஸ்ரீராம்நகர் பூங்காவை சீரமைப்பார்களா?
கமல், காட்பாடி.