9 July 2022 9:16 AM GMT
#1035
ஆபத்தான மரம்
தோவாளை
தெரிவித்தவர்: தா. தங்கப்பன்
தோவாளை மெயின்ரோடு அரசு விருந்தினர் மாளிகை எதிரில் ஒரு அரச மரம் உள்ளது. இந்த மரம் தற்போது முழுவதும் பட்ட நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று வீசும் போது மரத்தின் உலர்ந்த கிளைகள் முறிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு பட்டு போன மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தா. தங்கப்பன், தோவாளை.
-தா. தங்கப்பன், தோவாளை.