1 March 2023 4:47 PM GMT
#28259
கோவில்கள் சீரமைக்கப்படுமா?
வாலாஜா
தெரிவித்தவர்: சிவலிங்கம், சமூக சேவகர்
வாலாஜா தாலுகா அனந்தலை ஊராட்சி பள்ளத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரர் கோவில் உள்ளன. இந்தக் கோவில்கள் முன்னோர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அதனால் கோவில்களின் சுவரில் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளன. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 2 கோவில்களையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுமாறு ஊர் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
-சிவலிங்கம், சமூக சேவகர், வி.சி.மோட்டூர்.