15 March 2023 12:39 PM GMT
#29013
நடவடிக்கை எடுப்பார்களா?
திட்டுவிளை
தெரிவித்தவர்: சேக் அப்துல்காதர்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பகுதியில் அனந்தனார் கால்வாயில் பாய்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது நிரம்பி அருகில் உள்ள ஆப்தீன்நகருக்குள் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்வதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கால்வாயிலில் இருந்து தண்ணீர் குடியிப்பு பகுதிக்குள் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேக் அப்துல்காதர், திட்டுவிளை.