9 Aug 2023 2:45 PM GMT
#37745
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
சாந்திநகர்
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு சாந்திநகர் 6-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் கட்டிட பணிக்காக மணல் குவிக்கப்பட்டுள்ளது. அந்த மணலில் சாலையோரம் நடமாடும் மாடுகள் படுத்துகிடக்கின்றன. அவற்றால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாடுகள் முட்டிவிடும் என கருதி பாதசாரிகள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சம் கொள்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மாடுகள் சாலையில் நடமாடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.