6 Aug 2023 2:42 PM GMT
#37542
வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி
ஜெயநகர்
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு ஜெயநகர் 33-வது கிராஸ் 4-வது பிளாக் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் பலரும் அங்கு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.