17 May 2023 4:03 PM GMT
#32877
ஆபத்தான நிலையில் நிற்கும் மரம்
பெங்களூரு
தெரிவித்தவர்: சண்முகா
பெங்களூரு மத்திகெரே கோகுலா விரிவாக்கம் 2-வது பேஸ் பகுதியில் சாலையோரம் நின்ற மரத்தை சமீபத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினார். ஆனால் அந்த மரத்தில் கிளைகள் மற்றும் பாதி அளவு மட்டும் வெட்டிவிட்டு, வேருடன் பாதியளவை அப்படியே விட்டு சென்றுவிட்டனர். தற்போது அந்த மரம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் அந்த மரத்தை முழுமையாக அகற்ற வேண்டும்.