15 March 2023 6:23 PM GMT
#29165
பாலம் அமைக்க வேண்டும்
அரங்கூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநத்தம் அருகே அரங்கூரில் உள்ள வெள்ளாற்றை கடந்து பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிகாட்டுக்கு பள்ளி-கல்லூரி மாணவா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சென்று வருகின்றனர். இருப்பினும் இங்கு பாலம் அமைக்கப்படாமல் இருப்பதாலும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதாலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு, கடந்து செல்ல பாலம் அமைக்கவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?