24 Sep 2022 5:56 PM GMT
#17096
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
அண்ணாமலைநகர்
தெரிவித்தவர்: விக்னேஷ்
அண்ணாமலைநகர் மேம்பாலம் கீழ்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் மதுபிரியர்கள் மதுகுடித்துவிட்டு போதை தலைக்கு ஏறியதும் ஆபாசமாக பேசுகிறார்கள். மேலும் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவ்வழியாக செல்லும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.