Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Jan 2025 8:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53029

தெருவில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட திருமலை நகரில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட திருத்தணி தெற்கு தெருவில் பாய்ந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, நடவடிக்கை எடுப்பார்களா? -ரவிச்சந்திரன், அனந்தலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:44 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53028

கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்படுமா?

மற்றவை

வாலாஜா நகராட்சியில் தினசரி மார்க்கெட் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. கழிவறையை தூய்மைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முரளி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:42 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#53027

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்போக்குவரத்து

குடியாத்தம்-காட்பாடி இடையே இயக்கப்படும் பஸ்களில் விசேஷ நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பயணிகளுக்கு பஸ்சில் போதிய இடம் கிடைப்பதில்லை. நோயாளிகள், முதியோர் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. முக்கிய விசேஷ காலங்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். -மயில்சாமி, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:40 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#53026

பணியை விரைந்து முடிப்பார்களா?

சாலை

காட்பாடி கழிஞ்சூர் ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து பிரியும் காங்கேய நல்லூர் சாலை நடுவே பள்ளம் தோண்டி பாதாள சாக்கடை திட்டப்பணியை மேற்கொண்டனர். அந்தப் பணியை 2 ஆண்டுக்கும்மேல் ‘ஜவ்வாக’ இழுத்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. பணியை விரைந்து முடித்து, சாலையில் தார் ஊற்றி சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கிருஷ்ணராஜ், காங்கேயநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:38 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53025

ஆமை வேகத்தில் காத்திருக்கும் கூடம் கட்டும் பணி

மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காட்பாடி செல்லும் டவுன் பஸ்கள் நிற்கும்இடத்தில் உள்ளூர் பயணிகள் காத்திருக்கும் நிழற்கூடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கடும் பனியில் பயணிகள் நடுங்கியவாறு பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் காத்திருக்கும் நிழற்கூடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -நாகராஜன், முத்துமண்டபம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:37 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53024

பூமிக்கடியில் மின்வழிப்பாதை அமைப்பார்களா?

மின்சாரம்

வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை எதிரே ஆற்காடு சாலையில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. சாலையோரம் இருக்கும் மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மரும் உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகடைகள் செயல்படுவது இதற்கு காரணம். அங்கு வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். எனவே இரும்பு மின்கம்பங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பூமிக்கடியில் மின் வழிப்பாதையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -டேனியல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#53023

விபத்தை ஏற்படுத்தும் சாலையோர குழாய்

விபத்தை ஏற்படுத்தும் சாலையோர குழாய்சாலை

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஆசிரியர் குடியிருப்புக்கு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடிநீர் திருப்பு குழாய் திறந்த வெளியாக சாலை மட்டத்தை விட உயரமாக உள்ளது. இது, பாதசாரிகள் கால்களை பதம் பார்த்து, வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடேசன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#53022

கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

காட்பாடி சில்க் மில் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு தியேட்டர் அருகில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயை சில்க் மில் பகுதியில் இருந்து காங்கேய நல்லூர் ரவுண்டானா வரை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவக்குமார், சில்க் மில் காட்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53021

வீணாக செல்லும் குடிநீர்

தண்ணீர்

வேலூர் பெரியார் பூங்கா பின்பக்கம் உள்ள கோட்டை சுற்றுச்சாலை நடுவே, சாலையின் கீழே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. தண்ணீர் சாலையில் தேங்குவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குடிநீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:26 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#53020

வார்டு எண் தவறாக எழுதப்பட்டுள்ள பெயர் பலகை

வார்டு எண் தவறாக எழுதப்பட்டுள்ள பெயர் பலகைமற்றவை

வேலூர் மாநகராட்சி 11-வது வார்டில் கோபாலபுரம் பகுதியில் மாநகராட்சி பசுமை பூங்கா உள்ளது. அங்கு வைக்கப்பட்ட பெயர் பலகையில் வார்டு எண்:10 என தவறாக உள்ளது. அதை சரியாக திருத்தி எழுத அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -மு.ராமு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#53019

சாலையோரம் வீணாக ஓடும் குடிநீர்

சாலையோரம் வீணாக ஓடும் குடிநீர்தண்ணீர்

ஆரணி நகராட்சி அலுவலகத்தை அடுத்த குடிநீர் நீரேற்றும் நிலையம் அருகில் மெயின் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. ஆரணி அரசு மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய சாலையோரம் ஆறாக தண்ணீர் ஓடி தேங்குகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. ஆகையால், குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயராஜா, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 8:17 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#53018

அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே மகமாய்திருமணி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு சேத்துப்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் சேத்துப்பட்டு, வயலூர் வழியாக மடம், தேசூர், மகமாய் திருமணி வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு டவுன் பஸ் இயக்க முன் வரவேண்டும். -மண்ணுசுருட்டை, மகமாய்திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick