10 Nov 2024 5:50 PM GMT
#51329
குப்பை கிடங்காக மாறிய பாலம்
சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து காரவள்ளிக்கு செல்லும் வழியில் சாமிகாடு கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதியில் வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழே சமூக விரோதிகள் சிலர் அமர்ந்து மது குடித்து விட்டு காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. மேலும் அந்த இடம் குப்பை கிடங்காக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதி, நாமக்கல்.