15 Sep 2024 12:03 PM GMT
#49799
குப்பைகள் அகற்றப்படுமா?
திருவேற்காடு
தெரிவித்தவர்: முனிவேல்
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, பாலாஜி நகர் முதல் தெருவில் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மழை காலங்களில் நிலை இன்னும் மோசமாகி விடுகிறது. மேலும், புதர்போல் செடிகள் வளர்ந்து இருப்பதால் விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வரும் அபாயமும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.