21 April 2024 4:22 PM GMT
#46151
இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மடப்பட்டு
தெரிவித்தவர்: கிராம மக்கள்
உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு சந்தைத்தோப்பு சாலையையொட்டி உள்ள பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க இறைச்சி கழிவுகளை உடனே அகற்றுவதோடு, அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.