7 April 2024 11:48 AM GMT
#45749
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
மாங்காடு
தெரிவித்தவர்: சிவரஞ்சனி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகே உள்ள மாங்காடு எல்லைப்புற பகுதிகள் மற்றும் புளிச்சங்காடு கைகாட்டில் இருந்து பேராவூரணி செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.