17 Sep 2023 12:01 PM GMT
#39995
மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் குப்பைகள்
அழகப்பபுரம்
தெரிவித்தவர்: ராமச்சந்திரன்
சேரன்மாதேவி யூனியன் தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து வைக்கப்படுகிறது. இங்குள்ள குப்பைகளுக்கு மர்மநபர்கள் அடிக்கடி தீ வைத்து செல்வதால், சுற்று வட்டார பகுதிகளில் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?