7 Jun 2023 11:50 AM GMT
#33997
குப்பை தொட்டிகளாக மாறிய பாதாள சாக்கடை மூடிகள்
அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. வாகனங்கள் அதிகம் செல்லும் சாலைகளில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து போய் விடுகின்றன. இவைகளை நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி மாற்றி வந்தார்கள். நகராட்சியின் 9-வது வார்டு கல்லூரி சாலையில் பல இடங்களில் சாலையின் உயரம் அதிகமானதால் சாக்கடை மூடிகள் உள்பகுதி பள்ளமாய் போய்விட்டது. இதனை மாற்றுவதற்காக அதற்கு வேண்டிய உபகரணங்களை சாலையின் ஓரத்தில் போட்டு பல மாதங்கள் ஆகியும் எந்த பணியும் நடைபெறவில்லை. அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து பலர் குப்பைகளை அதில் போட்டு வருகின்றனர். இதனால் பாதாள சாக்கடை மடிகள் குப்பைதொட்டியாக மாறி உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.