14 May 2023 11:37 AM GMT
#32570
குப்பைத்தொட்டி தேவை
திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் தெற்கு வீதி சாலையோரத்தில் தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லை. இதன்காரணமாக சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவை துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேவையான இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.