16 Nov 2022 11:20 AM GMT
#21676
சுகாதார சீர்கேடு
ஏற்காடு, கூட்டாத்துப்பட்டி
தெரிவித்தவர்: Karthikeyan v
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள குட்டை கூட்டத்துப்பட்டி ஊராட்சியின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. குட்டையில் உள்ள நீரில் கொட்டுப்போன இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் காய்ச்சல் போன்ற பல நோய்களால் மக்கள் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதார சீர்கேட்டில் இருந்து குட்டையையும், நோயிலிருந்து மக்களையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.