14 Sep 2022 12:38 PM GMT
#14844
தொற்று நோய் பரவும் அபாயம்
நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Palvannan
நாகை மாவட்டம் திருமருகல் நாகூர் சாலையில் திருமருகல் ஊராட்சி பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்