22 Sep 2024 11:33 AM GMT
#49964
ஆபத்தான மின் கம்பம்
நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் கடைத்தெருவில் பஸ் நிறுத்தம் அருகில் மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அடிப்பகுதி சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொது மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருமருகல்