7 July 2024 10:26 AM GMT
#48012
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் 1-ம் மைல் பகுதியில் இருந்து வேடன்வயலுக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலைக்கு குறுக்கே ஆற்று வாய்க்கால் உள்ளது. அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மீது தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறது. கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்லும்போது மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அந்த மின்கம்பிகளை உயர்த்தி பொருத்த வேண்டும்.