21 April 2024 10:22 AM GMT
#46058
சேதமடைந்த மின்கம்பம்
கும்பகோணம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவலஞ்சுளி கிராமம் வடக்கு தெரு பிள்ளையார்கோவில் பின்புறம் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்ட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.