1 Oct 2023 10:29 AM GMT
#40772
தெருவிளக்குகள் வேண்டும்
கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட படச்சேரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஆனால் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் மேலும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு போதிய தெருவிளக்குகளை பொருத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.