22 July 2022 3:58 PM GMT
#3292
ஒளிராத உயர்மின்கோபுரவிளக்கு
திருவோணம்
தெரிவித்தவர்: Rajasekar
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி திருவோணத்தில் பொதுமக்கள் வசதிக்காக உயர்மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு முறையான பராமரிப்பின்றி கடந்த சில வாரங்களாக ஒளிராமல் உள்ளது. இதன்காரணமாக திருவோணம் மூவர்ரோடு, நான்குவழிச்சாலை பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வெளிச்சம் இல்லாததால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர்மின்கோபுர விளக்கை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?