25 Aug 2022 4:55 PM GMT
#10742
ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு
செங்கோட்டை
தெரிவித்தவர்: ராஜீவ்காந்தி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு வாஞ்சிநாதன் சிலை முன்பு உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த பல மாதங்களாக ஒளிரவில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே காட்சிப்பொருளாக உள்ள உயர்கோபுர மின்விளக்குகளை மீண்டும் ஒளிரவைக்க வேண்டுகிறேன்.