ஈரோடு சம்பத்நகர் உழவர்சந்தை அருகே உள்ள சாக்கடை கால்வாய் உடைந்து கிடக்கிறது. இதனால் காலையில் உழவர் சந்தைக்கு செல்பவர்கள் கால்வாயில் விழுந்து விடுகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்பவர்கள் தடுமாறி உள்ளே விழுந்து காயம் அடைகின்றனர். ஆபத்தான நிலையில் காணப்படும் சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?