மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் இருந்து துலா கட்டம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.