சேலம் கல்லாங்குத்து தேவேந்திரபுரம் முதல் தெருவில் சாக்கடை கால்வாய் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய் தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.