சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி 3-வது வார்டு பழையகாலனி சுகாதார நிலையம் உள்ளது. அந்த பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் நீர்நிலைகள் பராமரிக்காததால் செடிகொடிகள் வளர்ந்து பாசி படர்ந்து காட்சி அளிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் குப்பைகளை அகற்றி நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்.