சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவில் குறுகிய சாலையில் உரிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.