நடைபாதை சேதம்

Update: 2024-01-21 12:36 GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்கா அருகில் கழிப்பறை ஒன்று இருக்கிறது. இந்த கழிப்பறைக்கு அருகில் உள்ள நடைபாதை சேதம் அடைந்து மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். இந்த நிலையை போக்க, அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்