சாக்கடையில் அடைப்பு

Update: 2023-08-27 11:18 GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் ஓல்டு உட்ஹவுஸ் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அந்த சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து, அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்