காட்சிப்பொருளான நூலக கட்டிடம்

Update: 2026-09-13 17:51 GMT
சேத்தியாத்தோப்பு பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கிளை நூலகத்திற்காக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை கட்டிடம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்சிப்பொருளாக உள்ள நூலக கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டியது அவசியம்

மேலும் செய்திகள்