விழுப்புரம் அடுத்த எனதிரிமங்கலம்-தளவானூர் பகுதியில் உள்ள தடுப்பணையின் ஷட்டர் அருகே தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தவறி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.