- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ்களில் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுமா?
ஆரணியில் இருந்து சென்னை செல்லக்கூடிய தடம் எண்:202 என்ற அரசு பஸ்களில் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. சாதாரண பஸ் என்று சொல்லப்படுகிற பஸ்சுக்கு ரூ.115 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அந்தப் பஸ்கள் வாலாஜா, சுங்குவார்சத்திரம் போன்ற ஊர்களுக்கு சென்று வெளியே வர வேண்டும். ஆனால் பாயிண்ட் டூ பாயிண்ட் என்று சொல்லக்கூடிய விரைவு பஸ் மற்றும் டீலக்ஸ் பஸ் ஆகியவற்றுக்கு ஆரணியில் இருந்து ரூ.135 கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. அந்தப் பஸ்கள் ஆரணியில் இருந்து ஆற்காடு வழியாக பைபாஸ் சாலையில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் அனைத்துப் பஸ்களுமே வாலாஜாபேட்டை, சுங்குவார்சத்திரம் சென்று வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதால் ஒவ்வொரு பஸ்சும் 4.30 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எனவே அனைத்துப் பஸ்களிலும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுமா?
-அழகிரி, ஆரணி.