22 Sep 2024 5:52 PM GMT
#50075
விபத்து அபாயம்
சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமக்கல் மேட்டுத்தெரு வழியாக சேந்தமங்கலம் சாலை செல்வதற்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை ரெயில் நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை சேந்தமங்கலம் சாலையில் சந்திக்கும் இடத்தில் சாலையோரத்தில் பெரிய குழி ஒன்று உருவாகி உள்ளது. இதில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இந்த குழியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், சேந்தமங்கலம்.