- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் இருந்து கவுண்டம்பட்டிக்கு செல்லும் சாலையில் பச்சைவெளி என்ற இடம் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி வழியாக கவுண்டம்பட்டி, மூவராயன்பாளையம், மூவானூர், திருத்தியமலை, சுக்காம்பட்டி வரை அரசு பஸ்களும், அதேபோல் முசிறி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களும் சென்று வருகின்றன. மேலும் திருப்பைஞ்சீலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெறும் காய்கறி சந்தைக்கு வரும் விவசாயிகள் இந்த சாலை வழியே சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் பொருட்களை ஏற்றி சென்று வருகின்றனர். இந்த நிலையில் பச்சைவெளி என்ற இடத்தில் வேகத்தடை இல்லாததால் அதிவேகமாக சாலையின் இரு புறங்களிலும் வரும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பச்சைவெளியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.