- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பணிமனை மாற்றத்தால் பயணிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கொத்தமங்கலத்திற்கு அரசு பஸ்களின் பணிமனையானது மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையில் இருந்து இயங்கி வந்த நிலையில், திடீரென தற்போது ஆலங்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. இதனால் அதிகாலை நேரத்தில் ஆலங்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை வரை அரசு பஸ்சை ஆட்கள் இன்றி வெறுமனே இயக்கி வருவதோடு குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராமல் பல்வேறு பகுதிகளிலும் இருந்து காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த அரசு பஸ்சை நம்பி கொத்தமங்கலம் பகுதியில் அதிகாலை நேரத்தில் காத்திருக்கும் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பல்வேறு ஊர்களுக்கும் பஸ் மாறி சென்று வரக்கூடிய அரசு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் வரை அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பணிமனை மாற்றம் செய்யப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் புதுக்கோட்டையில் இருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.