19 May 2024 3:55 PM GMT
#46837
பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாளையம் புதூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து தர்மபுரிக்கும் அதிகளவிலான தனியார் பஸ்கள் சென்று வருகிறது. தனியார் பஸ்கள், பாளையம் புதூர் பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. மேலும் சேலத்தில் இருந்து தனியார் பஸ்சில் வரும் பயணிகளை பாளையம் புதூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாமல், நல்லம்பள்ளியில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாளையம் புதூர் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில், அரசு மற்றும் தனியார் புறநகர் பஸ்கள் நின்று செல்ல அனுமதி இருந்தும், நிறுத்தப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, நல்லம்பள்ளி.